×

ஆந்திராவில் வாகன சோதனையில் கோடிக்கணக்கில் பணம் சிக்கியது: போலீசார் விசாரணை

திருமலை: அனந்தபுரம் மாவட்டத்தில் நடந்த வாகன சோதனையில் ஆவணமில்லாத கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலத்தில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல் வரும் 13ம் தேதி நடக்கிறது. இதையொட்டி ஏற்பாடுகளை தேர்தல் துறை அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் ₹50 ஆயிரத்திற்கும் மேல் உரிய ஆவணமின்றி எடுத்துச்செல்லக்கூடாது. இதுபோல் எடுத்துச்செல்வதை தடுக்க போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அனந்தபுரம் மாவட்டம் விதுத்நகர் பகுதியில் போலீசார் தேர்தலையொட்டி நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில் இரண்டு பைகளில் பல கோடி ரூபாய் ரொக்க பணம் இருப்பது தெரிய வந்தது. எவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்று அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியிடப்படவில்லை. உரிய ஆவணங்கள் இல்லாததால் பணம் யாருடையது எங்கிருந்து எங்கு கொண்டு செல்லப்படுகிறது என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post ஆந்திராவில் வாகன சோதனையில் கோடிக்கணக்கில் பணம் சிக்கியது: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Tirumala ,Ananthapuram district ,Assembly ,Parliamentary elections ,Election Department ,
× RELATED வெடிகுண்டுகள், கத்தி உள்பட பயங்கர...